Dec 22, 2008

அவள், அவன், நீங்கள் மற்றும் நான்

வாழ்கை என்பது சுஜாதாவின் கதையை போல... ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? என்று எதையும் யோசிக்காமல் எதையாவது செய்துக் கொண்டே இருக்கும். இல்லாவிட்டால் எந்த சம்பந்தமும் இல்லாத நீங்களும் நானும் இன்று "அவளையும் அவனையும்" பற்றிய இடுகையில் சந்தித்து இருப்போமா??? அவளும் அவனுமா ? யார் அவர்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. இதோ அவளும் அவனும் உங்களுக்காக...


அவள் கோவை மாநகரத்தில் 1985 ஆம் ஆண்டு பிறந்த ஒரு கோதை. அவன் அதே வருடம் செந்தமிழ்(!) பேசும் சிங்கார சென்னையில் பிறந்தவன். அவள் பிறந்த தினத்தில் ஏமாற்றி பறிக்கப்பட்ட அத்தனை சொத்தும் அவள் தந்தைக்கு திரும்ப கிடைத்ததில், வீட்டின் மகாலக்ஷ்மி ஆனாள் அவள். அவன் பிறந்த நாளில் அவன் தந்தைக்கு எந்த சொத்தும் கிடைக்கவில்லை அவர் அதுவரை ஏதும் இழக்காததாலோ என்னவோ... படிப்பு வாசனையே அறியாத அவள் குடும்பத்தில் தந்தை விரும்பியபடியே மிக அருமையாக படித்தாள் அவள். 35 மதிப்பெண் எடுத்தால் தேறிவிடலாம் என்று யாரோ அவனிடம் சொல்ல, ஒவ்வொரு முறையும் 35 க்கு அதிகமாய் பெற்று விடுவான் போராடி. ஆனாலும் ஏன் ஒவ்வொரு முறையும் தேர்வில் தோல்வி என்றே கூறுகிறார்கள் என்று அவனுக்கு புரியவே இல்லை. பாவம் அவன், அவனிடம் 35 மதிப்பெண் என்று சொன்ன அந்த புண்ணியவான் 'ஒவ்வொரு பாடத்திலும்' என்று சொல்ல மறந்து விட்டார்.


எல்லா வருடமும் பாட்டியின் பேராதரவால் பள்ளி சுற்றுலா செல்ல மிக சுலபமாய் அனுமதி பெற்றிடுவாள் அவள். தாத்தாவின் கண்டிப்பால் மெரினா கடற்கரையை தாண்டி எங்கும் சென்றதில்லை அவன். ஒவ்வொரு வருடமும் கோடையில் அனல் என்பது என்ன என்று கேட்கும் ஊர்களுக்கு நாய் குட்டியுடன் சென்று விடுவாள் அவள். அவனும் அப்படி தான், எல்லா வருடமும் வெப்பத்தை தவிர்க்க குடும்பத்தோடு(!) மகாபலிபுரம் சென்று விடுவான். அந்த சிலைகளை செதுக்கிய சிற்பியை விட அவனுக்கு அந்த சிலைகளை அதிகம் தெரியும். ஆம், அந்த சிற்பத்தில் யாரோ இருவர் பெயரும் ஒரு அம்பு குறி பாய்ந்த இதயமும் இருப்பது அந்த சிற்பிக்கு தெரியுமா என்ன?

என்ன அவனும் அவளும் இன்னமும் சந்திக்கவே இல்லையே, சந்திப்பார்களா என்றா கேட்டீர்கள்? சரி தான். அவனும் அவளும் சந்தித்து இருக்க விட்டால் நீங்களும் நானும் இங்கு சந்தித்திருக்கவே மாட்டோமே. அவளும் அவனும் எங்கு எப்போது சந்தித்தார்கள் என்று தெரிய வேண்டும் அவ்வளவு தானே? இதோ சொல்கிறேன் கேளுங்கள்.

கால சக்கரம் வேகமாய் சுழன்றது. பள்ளி இறுதி தேர்வு எழுதி, முதல் மதிப்பெண் பெறுவோமா என்று அவளும், தேர்ச்சி அடைவோமா என்று அவனும் காத்து இருந்தார்கள். தேர்வு முடிவும் வந்தது. இருவரது எதிர்பார்ப்பும் நடந்தது. அவன் கல்லூரி படிப்பிற்காக கோவை பூ.சா.கோ கலை கல்லூரியில் சேர்ந்தான். அவசரப்படாதீர்கள், அவர்கள் அங்கு சந்திக்கவில்லை. அவள் அண்ணா பல்கலைகழகத்தில் பொறியியல் படிக்க சென்னை சென்றுவிட்டாள். இருவரும் கற்றது கணிப்பொறி.

3 வருடங்கள்… பல மாற்றங்கள் அவனிடமும் அவனை சுற்றியும். அவன் பாடங்களை கற்காவிட்டாலும், அவன் கல்லூரியும், தங்கி இருந்த ஹோப் கல்லூரி நட்பும் வாழ்கையை ரசிக்க கற்று தந்தது. வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவன் ரசித்து வாழ்ந்த காலங்கள் அது. அவனை சுற்றி எத்தனையோ பேர் காதலித்தும் அவன் காதலிக்கவில்லை. காதலிக்க தைரியம் இல்லாததாலா அல்லது காதலிக்க பெண் கிடைக்காததாலா என்று ஆராயவும் அவன் தயாராய் இல்லை. காதல் கதைகளையும் கவிதைகளையும் படிப்பதோடு நிறுத்தி கொண்டான். அந்த கதைகளிலும் கவிதைகளிலும் வரும் காதலியை பற்றி படிக்கும் போதெல்லாம் அவன் மனக்கண்களில் ஒரு முகம் தோன்றி மறையும். அவளோடு மட்டுமே அவன் பேசினான், பழகினான், காதலும் கொண்டான். அப்படி நிஜத்தில் ஒருவள் இருப்பாளா என்று கூட அவன் யோசித்து பார்த்ததில்லை. நாட்கள் ஓடியது. கல்லூரி இறுதியாண்டில் நடந்த வேலைக்கான நேர்முக தேர்வில் வேறு யாருமே இல்லாத காரணத்தால் அந்த பெரிய கணிப்பொறி நிறுவனத்தால் அவன் தேர்ந்தெடுக்கபட்டான். மீண்டும் சென்னை... சிறு மாற்றத்தோடு... சிறு ஏற்றத்தோடு … 'அவள் இருக்கும் சிங்கார சென்னை'

படிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அவனை பார்த்தால் புரியும். ஒரே வருடத்தில் அணியில் மிக திறமை வாய்ந்தவன் அவன் என எல்லோரும் சொல்லும் அளவிற்கு மாறி இருந்தான். பெற்றவர்களின் துணையிருப்பு, நிலையான வேலை, கை நிறைய சம்பளம், நல்ல நண்பர்கள் என எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவதாய் எப்போதும் தோன்றும் அவனுக்கு. ஒரு நாள் முதல் முறையாய் காதலிக்கலாமா என்று சிந்தித்தான். அவனுக்கு அந்த எண்ணம் தோன்றிய அதே நாளில் வந்தது அவளுக்கு வேலைக்கான நேர்முக தேர்வு, இறுதியாண்டில். முதல் நேர்முக தேர்விலேயே வேலை வாங்க வேண்டும் என்பது அவள் விருப்பம். நேர்முக தேர்விற்கு வந்த முதல் நிறுவனம் அவன் வேலை பார்க்கும் அந்த நிறுவனம். அவள் எண்ணியது ஈடேற, அங்கு தொடங்கியது அவர்கள் காதல் பயணம் அவர்கள் அறியாமலே.

அமைதியாய் சென்று கொண்டிருந்தது வாழ்கை அவனுக்கு. எப்போதும் போலவே மிக சாதாரணமாய் முடிந்த ஒரு நாளின் இரவில் அவன் கனவில் அவள் தோன்றினாள். ஒரு வாழ்வே வாழ்ந்து முடித்தார்கள் அந்த கனவில் இருவரும். அடுத்த நாள் காலை, கண்களில் இருந்து இன்னமும் நீங்காத கனவு தந்த உற்சாகத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தான் அவன். கண்களில் முதல் நாள் வேலைக்கு செல்லும் கனவுகளோடு அவள் அந்த நிறுவனத்தின் அதிநவீன சொகுசு பேருந்திற்காக காத்திருந்தாள். அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து வந்தது... அவளை முதல் முறையாய் பேருந்தில் பார்த்தான். பார்த்தும் வெள்ளை நிற ஆடை அணிந்த தேவதைகள் தோன்றவில்லை... பின்னணியில் ‘நம் தன நம் தன நம் தன' என்று எந்த குரலும் கேட்கவில்லை (ஒருவேளை தேவதைப் பெண்களும் கணிப்பொறி நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று விட்டார்களோ?). ஆனால் அவள் முகம் மிகப் பழகிய முகமாய் தோன்றியது அவனுக்கு. ஆம், பழகிய முகம் தான்... காதல் கதைகள் படிக்கும் போதெல்லாம் அவன் மனக்கண்ணில் தோன்றிய முகம் அல்லவா அது. கண்டேன் அவளை என குதித்தது அவன் மனம். இனி வாழ்வென்றால் அது இவளோடே என்றது அவன் அறிவு. மனமும் அறிவும் ஒத்த எடுக்கும் முடிவு தவறாகவும் இருக்காது, மரணத்திலும் மாறாது. அண்ணல் மட்டுமே நோக்கினான் அவள் நோக்கவில்லை, கண்களை கனவுகள் மறைத்ததால்.



யார் இவள்??? அவன் மனம் தவித்தது. காதலி செவ்வாய் கிரகத்தில் இருந்தால் கூட இஸ்ரோவின் செயற்கைகோளை விட வேகமாய் தகவல் சேகரிப்பான் காதலன்(இஸ்ரோவிடம் இதை சொல்லி விடாதீர்கள், உடனே அங்கு ஒரு காதலி அனுப்பப்படக்கூடும் செயற்கைக்கோளுக்கு பதிலாய்). அவன் அலுவலகத்திலேயே பணிபுரியும் அவள் தகவல்களை சேகரிப்பதா சிரமம்??? இரண்டே நாட்களில் அவளை பற்றிய அத்தனை தகவல்களையும் தெரிந்து கொண்டான் அவன். இப்போது அவளை பற்றி அவளை விட அவனுக்கே அதிகம் தெரியும். ஆம், அவள் இவன் இதயத்தில் குடி கொண்டது அவளுக்கு இன்னமும் தெரியாது அல்லவா. ஒன்னரை மாத பயிற்சிக்கு பிறகு அவள் வந்தது அவன் அணிக்கு. கடந்த ஒரு வருடத்தில் எந்த பெண்ணிடமும் பேசாத அவன், முதல் நாளே அவளை தேடி சென்று அணிக்கு வரவேற்று விட்டு வந்ததை பார்த்து அவன் நண்பர்கள் கேள்வி கணை தொடுக்க ஆரம்பித்தனர்... அவர்களிடம் 'ஒன்றும் இல்லையடா' என்று மட்டும் சொல்லிவிட்டு, தனக்குள் 'நான் அவள் இல்லாமல்' என்று நினைத்து கொண்டான்.

காதல் பயணம் தொடரும்...

பகுதி - 2

22 comments:

  1. சரவணா,
    இது முதல் கதை மாதிரியே தெரியல!! நடை சூப்பர்!! அட்டகாசம்!!

    ReplyDelete
  2. Saravana,

    First of all forgive me for posting comments in English for such a good Tamil story.

    It is really good, I really enjoyed reading it. You are great!!!

    Hope this is not your own story...

    When you will post the next part? Post it soon...

    ReplyDelete
  3. nanba....azhagana karpanai...azhagana varthaigal....azhagana kadhal....padika romba sandhoshama irukku....adutha pagudhi eppo....indha madiri adikadi " thodarum" nu podatha....romba nalla irukku da.....

    ReplyDelete
  4. பாராட்டுக்களுக்கு நன்றி நண்பர்களே...

    இது சொந்த கதை தான்... அதாவது நானே யோசிச்சு எழுதுன கதை... நீங்க நெனைக்கிற மாதிரி எனக்கு நடந்த கதை இல்ல...

    அடுத்த பதிவு நிச்சயம் வெகு விரைவில்...

    ReplyDelete
  5. Super narration da ... Kalakita :)
    Keep writing more.... U can become a writer soon (2nd profession)

    ReplyDelete
  6. //... நீங்க நெனைக்கிற மாதிரி எனக்கு நடந்த கதை இல்ல...

    பையன் ஊர திருவண்ணாமலை னு மாத்துனா கிட்ட தட்ட உன் கதையோட மேட்ச் ஆகுதே??

    ReplyDelete
  7. // 'ஒன்றும் இல்லையடா'

    காதல் வருமுன் என் தமிழ் , காதல் வந்த பின் சங்கதமிழா ??

    ReplyDelete
  8. // (ஒருவேளை தேவதைப் பெண்களும் கணிப்பொறி நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று விட்டார்களோ?)
    தேவதைகள் ?? அதுவம் கணிபொறி நிறுவனங்களில்?? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!!

    ReplyDelete
  9. //அண்ணல் மட்டுமே நோக்கினான்

    "அண்ணல் காந்தியடிகள்" னு எப்பவோ கடை படுச்ச ஞாபகம்!! உங்கள் கதை நாயகன் (ரர்) காந்திஜியா ?

    ReplyDelete
  10. // 'ஒன்றும் இல்லையடா'

    காதல் வருமுன் என் தமிழ் , காதல் வந்த பின் சங்கதமிழா ??//

    ஆங்கிலம் இல்லாமல் ஒரு தமிழ் கதை எழுத முடியுமா என ஒரு முயற்சி... அவ்வளவு தான்...

    ReplyDelete
  11. // (ஒருவேளை தேவதைப் பெண்களும் கணிப்பொறி நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று விட்டார்களோ?)
    தேவதைகள் ?? அதுவம் கணிபொறி நிறுவனங்களில்?? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!!//

    மச்சி நீ fix ஆயிட்ட அதனால உனக்கு எல்லாமே அப்படி தான் தெரியும்...

    ReplyDelete
  12. //... நீங்க நெனைக்கிற மாதிரி எனக்கு நடந்த கதை இல்ல...

    பையன் ஊர திருவண்ணாமலை னு மாத்துனா கிட்ட தட்ட உன் கதையோட மேட்ச் ஆகுதே??//

    என் கதையா? எனக்கே தெரியாதே... interestinga இருந்தா சொல்லு... உன் ப்ளாக்ல...

    ReplyDelete
  13. //என் கதையா? எனக்கே தெரியாதே... interestinga இருந்தா சொல்லு... உன் ப்ளாக்ல...

    அது தான் நீ கதையாவே எழுதறியே, அப்புறம் ஏன் நான் எழுதனும்??

    ReplyDelete
  14. Saravana,

    Eppo second part yaeludha pora?

    ReplyDelete
  15. அழகான நடையில் எழுதியிருக்கிறீர்கள் சரவணன்.
    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நன்றி குந்தவை அக்கா...

    ReplyDelete
  17. சரவணன் கதையும், எழுத்து நடையும் சூப்பர்!!

    மிக எளிமையான , நேர்த்தியான எழுத்துநடை படிப்பதற்கு சுவாரஸியமாக இருந்தது!!

    ReplyDelete
  18. முதல் முயற்சி மாதிரியே தோனவில்லை.
    அவ்ளோ அழகா இருக்கு உங்க எழுத்து;))

    ReplyDelete
  19. தொடர்ந்து நிறைய தமிழ் கதைகள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சரவணன்!!

    ReplyDelete
  20. கதை எழுதிட்டு......பின்னூட்டம் மூலம் எனக்கு தெரிவிச்சதுக்கு ரொம்ப தாங்க்ஸ்!!

    ReplyDelete
  21. If you dont mind.......can you please let me know if u post the next part of this story??

    ReplyDelete
  22. நன்றி திவ்யா... அடுத்த பகுதி எழுதியதும் நிச்சயம் உங்களுக்கு தெரிவிக்கிறேன்

    ReplyDelete